
பச்சிளம் குழந்தையை முதுகில் கட்டிக்கொண்டு பெட்ரோல் நிரப்பும் தாய் ஒருவரின் வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரியங்கா என்ற பெண் பயனர் பகிர்ந்த வீடியோ ஒன்று, தாய் ஒருவரின் கடின உழைப்பு மற்றும் குழந்தை மீதான பாசத்தை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.
அந்த வைரல் வீடியோவில், தாய் ஒருவர் லடாக் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் வாகனங்களுக்கு பெட்ரோல் ஊற்றிய படியே, தன்னுடைய முதுகில் பச்சிளம் குழந்தையை சுமந்தபடியே இயல்பாக பணிபுரிவது பார்க்க முடிகிறது.
இந்த வேலை பளுவிற்கு மத்தியில் பெட்ரோல் நிலையத்திற்கு வருகை தரும் வாடிக்கையாளர்களிடம் அவர் அன்பாக பேசி பழகுவது அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது.
முதுகில் உள்ள அந்த குழந்தையும், அங்கு வரும் வாகனங்களையும், வெளி மனிதர்களையும் ஆச்சரியத்துடன் எட்டி பார்க்கும் காட்சிகள் மிகுந்த நெகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வரும் நிலையில், கடின உழைப்பை வெளிப்படுத்தும் அந்த தாய்க்கு உதவ பலரும் வினவி வருகின்றனர்.
مقطع فيديو يثير الجدل وانقسام كبير في الآراء .. تعمل في محطة بنزين وطفلها على ظهرها#سوشال_سكاي #الهند pic.twitter.com/HERuLMcz58
— سكاي نيوز عربية (@skynewsarabia) October 10, 2026





