கிளிநொச்சியில் அடுத்தடுத்து தொடரும் சோகம் : மாணவி விபரீத முடிவால் உயிரிழப்பு!!

152

கிளிநொச்சி கோணாவில் பகுதியை சேர்ந்த உயர்தரத்தில் கல்வி பயிலக்கூடிய பாடசாலை மாணவி ஒருவர் தவறான முடிவால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

17 வயதான மாணவியே இவ்வாறு நேற்றையதினம் (12) உயிரிழதுள்ளார். அதேவேளை கடந்தவாரம் கிளிநொச்சி உருத்திரபுரம் பகுதியை சேர்ந்த மாணவியொருவரும் தவறான முடிவால் உயிரிழந்த நிலையில் மறுமொரு மாணவியும் உயிரிழந்துள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதேவேளை கடந்த 09 ஆம் திகதி கிளிநொச்சி – முரசுமோட்டை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த புகைப்பட கலையகம் நடாத்தி வருகின்ற இளைஞன் (வயது-29) படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிள் மீது கயஸ் வாகன மோதியதில் இந்த விபத்து இடம்பெற்று இருந்தது. கிளிநொச்சியில் அடுத்தடுத்து இளம் உயிர்கள் பறிபோகும் சோகம் அப்பகுதி மக்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தமிழர் பிரதேசங்க்களில் அடுத்தடுத்து இளவயது மரணங்கள் அதிகரித்துள்ளமை , பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.