சயீத் அஜ்மலை தொடர்ந்து முகமது ஹபீஸ், சுனில் நரேன் மீது முறையற்ற பந்துவீச்சுப் புகார்!!

546

hafeez-and-sunil-01-0123

பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் முகமது ஹபீஸ் பந்து வீச்சு சந்தேகம் அளிக்கும் வகையில் இருப்பதாக நடுவர்கள் புகார் அளித்துள்ளனர்.

சம்பியன்ஸ் லீக் T20 தொடரில் லாகூர் லயன்ஸ் (பாகிஸ்தான்) அணிக்காக விளையாடி வரும் சுழற்பந்து வீச்சாளர் முகமது ஹபீஸ் மற்றும் டொல்பின்ஸ் (தென் ஆப்பிரிக்கா) அணிக்காக விளையாடி வரும் சுழற்பந்து வீச்சாளர் பிரினெலன் சுப்ராயன் ஆகியோரின் பந்துவீச்சு விதிமுறைக்கு புறம்பாக இருப்பதாக நடுவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து இவர்கள் இருவரையும் சோதனைக்கு வரும்படி இந்திய கிரிக்கெட் சபையின் பந்து வீச்சுக் குழு அழைக்கலாம்.

ஆனால் இப்போதைக்கு அவர்கள் எந்தவித பரிசோதனையும் இன்றி தங்கள் அணிக்காக தொடர்ந்து விளையாட முடியும். ஆனால் மீண்டும் இது போன்ற புகார்கள் வந்தால், உடனடியாக இந்த தொடரில் பந்துவீச தடை விதிக்கப்படும்

சர்ச்சையில் சிக்கிய சுனில் நரைன்..

இந்தியாவில் நடைபெற்று வரும் சம்பியன்ஸ் லீக் கிரிக்கெட் போட்டித்தொடரின் போது, சட்டவிரோத முறையில் பந்து வீசிய குற்றச்சாட்டுக்கு மற்றொரு வீரர் இலக்காகியுள்ளார்.

மேற்கிந்திய தீவுகளின் வீரர் சுனில் நரைன் மீது இந்த குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. இந்த வருடத்தில் நான்காவது வீரராக இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

சம்பியன்ஸ் லீக் போட்டிகளில் நேற்று ஹைதாராபாத்தில் இடம்பெற்ற போட்டியில் கொல்கத்தை நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடிய சுனில் நரைன், டொல்பின்ஸ் அணிக்கு எதிரான பந்துவீச்சின் போது சட்டவிரோத பந்துவீச்சை மேற்கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளார்.

ஏற்கனவே முகமது ஹபீஸ், அட்னான் ரசூல், பிரநீலன் சுப்ராயன் ஆகியோர் இந்தக் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ளனர்.

இதேவேளை சம்பியன்ஸ் லீக் போட்டிகளில் நரைன் 11 விக்கெட்டுக்களை கைப்பற்றி தற்போதைய தொடரில் முன்னிலையில் உள்ளார்.