தங்க நகைகளை அடகு பிடிக்கும் நிலையத்தில் பெண் அதிகாரியின் அதிர்ச்சி செயல்!!

41

இரத்தினபுரியில் தங்க ஆபரணங்களை அடகு பிடிக்கும் தனியார் நிறுவனமொன்றில் போலி நகைகளை ஏமாற்றிய வழங்கிய அதன் உதவி முகாமையாளர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

7 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதியான இரண்டு தங்கச் சங்கிலிகளுக்கு பதிலாக இரண்டு போலிச் சங்கிலிகளை வைத்து, மோசடி செய்தமை தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்டவர் பெல்மடுல்ல, பலங்கொட பகுதியில் வசிக்கும் 2 பிள்ளைகளின் தாய் என தெரியவந்துள்ளது.

அவர் இரத்தினபுரி, மல்வல வீதியில் உள்ள அரலிய உயன பகுதியில் தற்காலிகமாக வசித்து வருவதாக பொலிஸார் தெரிவித்தனர். இரத்தினபுரி பிரதான வீதியில் அமைந்துள்ள குறித்த அடகு பிடிக்கும் நிறுவனத்தின் உரிமையாளரால் மாதாந்த சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது, 7 லட்சத்து 52 ஆயிரத்து 348 ரூபா பெறுமதியான இரண்டு தங்கச் சங்கிலிகளின் உறைகளுக்குள் போலியாக தயாரிக்கப்பட்ட இரண்டு சங்கிலிகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது தொடர்பில் நிறுவனத்தின் உதவி முகாமையாளரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தான் எந்த மோசடியும் செய்யவில்லை என அவர் கூறியதால், நிறுவனத்தின் உரிமையாளர் இரத்தினபுரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். இதனடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், பாதுகாப்பு கமராக்களில் திருட்டு நடக்கும் விதம் பதிவாகியிருந்தது.

அதன்பின்னர் குறித்த ஊழியர் கைது செய்யப்பட்டு மேற்கொள்ளப்பட்ட மேல் விசாரணைகளின் போது, இரண்டு சந்தர்ப்பங்களில் தங்கச் சங்கிலிகள் இரண்டையும் திருடி போலிச் சங்கிலிகளை வைத்தமை தெரியவந்துள்ளது.

ஒரு தங்கச் சங்கிலியை ஒரு லட்சத்து 70 ஆயிரம் ரூபாவிற்கு விற்று, மற்றைய தங்கச் சங்கிலியை அடகு வைத்து சுமார் 3 லட்சம் ரூபாவை பெற்றுக் கொண்டதாகவும் சந்தேக நபரான பெண் தெரிவித்துள்ளார்.