
தர்மபுரம் பகுதியில் இருந்து தமது புகைப்படக் கடையை திறப்பதற்காக கிளிநொச்சி நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த குடும்பஸ்தர் விபத்தில் சிக்கி, ஐந்து நாட்கள் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்று (12.10.2026) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
தர்மபுரம் பகுதியில் இருந்து தமது புகைப்படக் கடையை திறப்பதற்காக கிளிநொச்சி நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்த கணவன் – மனைவி இருவரும் விபத்துக்குள்ளான நிலையில், கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்துள்ளனர்.
மனைவி சிகிச்சையை முடிந்து வீடு திரும்பியுள்ளதாகவும், கணவன் சிகிச்சை பலனின்றி இன்று(12) உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு உயிரிழந்த நபர், பாரதிபுரம் பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய ஜெகதீஸ்வரன் மதுஜன் ஆவார். இந்த நிலையில், விபத்து தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





