
இலங்கையின் அனைத்து மாகாணங்களையும் உள்ளடக்கும் வகையில் பலத்த மின்னல் தொடர்பான எச்சரிக்கையை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது. இன்று (14.10.2026) காலை 11.00 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை, நாளை அதிகாலை 1.00 மணி வரை செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழையுடன் பலத்த மின்னல் ஏற்படுவதற்கான அதிக வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாகப் பலத்த காற்றும் வீசக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
எனவே, மின்னல் தாக்கத்தால் ஏற்படக்கூடிய ஆபத்துகளைக் குறைப்பதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களை வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.





