நிச்சயிக்கப்பட்ட திருமணத்தை திடீரென நிறுத்திய இளைஞன் : 24 வயது இளம்பெண் எடுத்த விபரீத முடிவு!!

23

கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் பையனூர் பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர், தமக்குத் திருமணம் நின்றுபோனதால் ஏற்பட்ட கடுமையான மனவேதனையின் காரணமாக ஆற்றில் குதித்துத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவின் கண்ணூர் மாவட்டத்திலுள்ள பையனூர் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ருதி (24). இவருக்குப் பெற்றோர் மற்றும் உறவினர்கள் முறைப்படி பேசித் திருமணம் ஒன்றை நிச்சயமிருந்தனர். இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில், அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் இவர்களது திருமணம் நடைபெறவிருந்தது.

திருமணத்திற்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், திடீரென்று அந்த இளைஞர் ஸ்ருதியைத் திருமணம் செய்து கொள்ள மறுத்துத் தன் முடிவிலிருந்து பின்வாங்கியுள்ளார். இதனால் திருமணம் நின்றுபோனது.

தனக்கு நிச்சயிக்கப்பட்ட திருமணம் திடீரென நின்று போனதை எண்ணி ஸ்ருதி கடும் மனஉளைச்சலுக்கும் மனவேதனைக்கும் ஆளாகியுள்ளார். இந்த நிலையில், கடந்த நேற்று இரவில் பெரும்பா ஆற்றுப்பகுதிக்குச் சென்ற அவர், ஆற்றில் குதித்துத் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

அவர் வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினரும் உறவினர்களும் அவரைத் தேடியுள்ளனர். அப்போது பெரும்பா ஆற்றுப் பகுதியில் ஸ்ருதி தற்கொலை செய்து கொண்ட தகவல் தெரியவந்துள்ளது.

இது குறித்துத் தகவலறிந்த காவல்துறையினர் உடனடியாக நிகழ்விடத்திற்கு விரைந்து சென்று உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். திருமணம் நின்றுபோன விரக்தியில் இளம் பெண் உயிரைவிட்டுக் கொண்ட இந்தச் சம்பவம் குறித்துக் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.