19 வயது இளைஞனுக்கு எமனான கார் : பரிதாபமாக பிரிந்த உயிர்!!

50

மாத்தளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கண்டி – யாழ்ப்பாணம் வீதியின் மரதன்கடவல பகுதியில், மாத்தளையிலிருந்து தம்புள்ளை நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்று எதிரே வந்த காருடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் மாத்தளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் ஹதரலியத்த பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞராவார். சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.