இளம் பெண்ணின் வாழ்வை பறித்த வாகனங்கள் : பொலிசாரின் பிடியில் இருவர்!!

180

மிரிகான பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவல வீதியில், நாவல சந்தியிலிருந்து மிரிகானை நோக்கிப் பயணித்த ஜீப் வண்டியொன்று திறந்த பல்கலைக்கழகத்திற்கு முன்னால் உள்ள பாதசாரிக் கடவையில் பெண் ஒருவர் கடப்பதற்காக நிறுத்தப்பட்டிருந்தது.

இதன்போது, பின்னால் வந்த கெப் ரக வாகனமொன்று குறித்த ஜீப் வண்டியின் பின்புறத்தில் மோதியுள்ளது. இம்மோதலின் அழுத்தத்தினால் ஜீப் வண்டி முன்னோக்கி நகர்ந்து வீதியைக் கடக்க முயன்ற பெண் மீது மோதியுள்ளது.

இவ்விபத்தில் படுகாயமடைந்த பல்லேவெல பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய பெண் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார். இவ்விபத்துடன் தொடர்புடைய ஜீப் மற்றும் கப் ரக வாகனங்களின் சாரதிகள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.