
வவுனியாயைச் சேர்ந்தவர் நந்தகுமார் (32). திருச்சி இலங்கைத் தமிழர் முகாமில் இருந்த இவர், கடந்த, 2013ம் ஆண்டு சென்னையில இருந்து அவுஸ்திரேலியாவுக்கு தப்பி செல்ல முயன்றதாக, கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள முகாமில் அடைக்கப்பட்டிருந்தார்.
நேற்று முன்தினம் மாலை, இலங்கை தமிழர் முகாம் அறையில் உள்ள மின் விசிறியில் நந்தகுமார், கயிற்றால் தூக்கு போட்டு தற்கொலை செய்ய முயன்றார். அவரை, சிறைத்துறை பொலிசார் மீட்டு, திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்





