அக்குரனையில் பல வாகனங்கள் மோதுண்டு கோர விபத்து : நால்வர் பலி!!

112

புதிய இணைப்பு

கண்டி – அக்குரணை, குருகொடை பகுதியில் ஏற்பட்ட பாரிய வாகன விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளதாக அக்குரணை வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி உறுதிபடுத்தியுள்ளார்.

மேலும், 6 பேர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முதலாம் இணைப்பு

கண்டி – அக்குரணை, குருகொடை பகுதியில் பாரிய வாகன விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பல வாகனங்கள் மோதுண்டு இந்த பாரிய விபத்து ஏற்பட்டுள்ளதுடன் சேத விபரங்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

எனினும், இந்த விபத்தில் சிலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகின்றது.

மேலும், இந்த விபத்தில் மோட்டார் சைக்கிள், கனரக வாகனம் ஒன்று உள்ளிட்ட பல வாகனங்கள் விபத்திற்குள்ளாகியுள்ளன.

அத்துடன், இந்த விபத்து காரணமாக, கண்டி – மாத்தளைக்கு இடையிலான வீதியின் போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.