சிறைக்கைதிகளுக்கு தொலைபேசி வசதி!!

813

prison

சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் கைதிகளுக்கு தொலைபேசி வசதியை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கான பரீட்சார்த்த முயற்சி எதிர்வரும் ஜனவரி தொடக்கம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களப் பேச்சாளர் துஷார உபுல்தெனிய தெரிவித்துள்ளார்.

முதலில் வெலிக்கடை சிறைச்சாலையில் உள்ள கைதிகளுக்கான தொலைபேசி வசதிகள் ஏற்படுத்தப்படும். அதன் மூலம் அவர்கள் வாரம் ஒரு தடவை தங்கள் குடும்பத்தினருடன் தொடர்பு கொள்வதற்கான வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என்று சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன் மூலம் சிறைச்சாலைகளினுள் சட்டவிரோத மொபைல் போன் பாவனையைக் கட்டுப்படுத்த முடியும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.