துபாய் சர்வதேச விமான நிலையத்தில் காணாமல் போன பூனை மீட்பு!!

30

துபாய் சர்வதேச விமான நிலையத்தில் கடந்த ஒக்டோபர் 11 அன்று காணாமல் போன, இலங்கைப் பயணியான அவீஷ்கா கௌமதிக்குச் சொந்தமான ‘சூட்டி’ என்ற செல்லப்பிராணிப் பூனை பத்திரமாக மீட்கப்பட்டுள்ளது.

விமான நிலையத்தின் பொருட்கள் பரிமாறும் பட்டை குகைப்பகுதிக்குள் வைத்து துபாய் விமான நிலையக் குழுவினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 2026, ஒக்டோபர் 11 அன்று இலங்கைக்கு விமான மூலம் தன் பூனையை அழைத்துச் சென்றபோது, ​​ஏற்பட்ட பதற்றமான சூழலில் பூனை கூண்டிலிருந்து தப்பியோடியது.

இதனால் தனது பயணத்தை ரத்து செய்த உரிமையாளர், தனது செல்லப்பிராணியைத் தேடி விமான நிலையத்திலேயே தங்கியிருந்து பெரும் சிரமங்களை எதிர்கொண்டிருந்தார். விமான நிலையக் குழுவினரின் இடைவிடாத அர்ப்பணிப்பு மற்றும் கூட்டு முயற்சியால் ‘சூட்டி’ பத்திரமாக மீட்கப்பட்டுள்ளது.