
தாய் குணமடைந்த நிலையில் அவரது 19 வயது மகன், 12 ஜோதிர்லிங்கத்தை தரிசிக்க வேண்டும் என்ற வேண்டுதல் நிறைவேற்ற தற்போது வரை 8000 கிமீ ஓடி 5 ஜோதிர்லிங்கத்தை தரிசித்துள்ளார்.
பீகார் மாநிலம் அராரியா மாவட்டத்தைச் சேர்ந்தவர் 19 வயதான மோனு மேதுர்பாலா(Monu Meturbala). இவரின் தாய் நோய்வாய்பட்டிருந்த போது, சிவபெருமானிடம் தன் தாய் குணமடைய வேண்டும் என வேண்டிய அவர், தாய் குணமடைந்தால் 12 ஜோதிர்லிங்கங்களை ஓடி வந்து தரிசனம் செய்வதாக வாக்குறுதி அளித்தார்.
அவரது தாய் நோயிலிருந்து குணமடைந்த நிலையில், அளித்த வாக்குறுதிப்படி நாட்டில் உள்ள 12 ஜோதிர்லிங்கங்களையும் தரிசிக்க ஓட தொடங்கியுள்ளார். கடந்த மார்ச் 15, 2026 அன்று, நோய்களை குணப்படுத்தும் ஆற்றலுக்கு அறியப்படும் ஜார்க்கண்ட்டில் உள்ள பைத்யநாத் கோவிலிருந்து தனது வேண்டுதலை தொடங்கினார்.

இதுவரை சுமார் 8,000 கிலோமீட்டர் தூரம் ஓடி, 12 புனித ஜோதிர்லிங்கங்களில் 5 தரிசித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இவர், தினமும் சுமார் 50 கிலோமீட்டர் தூரம் ஓடுவதாக கூறப்படுகிறது. மகாராஷ்டிராவிற்கு வருகை தந்த போது, சிவசேனாவை சேர்ந்த எம்எல்ஏவான சந்தோஷ் பங்கர் அவருடன் சிறிது தூரம் ஓடினார்.
சிறிது தூரம் பல்டி அடித்தபடி கடப்பது, பின்னோக்கி ஓடுவது என தனது பயணத்தை தொடர்ந்து வருகிறார். பல பகுதிகளில் காவல்துறையினர் அவருக்கு ஆதரவு அளித்து வருகின்றனர். 19 வயதில் தனது தாய்க்காக அவர் இவ்வளவு பெரிய முயற்சியை மேற்கொண்டது பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், அவர் தன்னுடைய இந்த வேண்டுதல் பயணத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார். அந்த பயணத்தில் பொதுமக்கள் பலரும் அவருக்கு தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

இந்தியாவில் உள்ள 12 ஜோதிர்லிங்கங்கள்
குஜராத்தில் சோமநாத்
ஆந்திராவில் ஸ்ரீசைலத்தில் மல்லிகார்ஜுனா
மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைனில் உள்ள மஹாகாலேஷ்வர்
மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஓம்காரேஷ்வர்
உத்தரகாண்டில் உள்ள கேதார்நாத்
மகாராஷ்டிராவில் பீமாசங்கர்
உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாத்
மகாராஷ்டிர மாநிலம் நாசிக் அருகே உள்ள திரிம்பகேஷ்வர் வைத்தியநாத்,
ஜார்க்கண்டில் உள்ள பைத்யநாத்
குஜராத்தில் துவாரகா அருகே நாகேஷ்வர்
தமிழ்நாட்டில் உள்ள ராமேஸ்வரம்
மகாராஷ்டிராவில் உள்ள எல்லோரா அருகே கிரிஷ்ணேஷ்வர்





