கனமழை மற்றும் மண்சரிவு எச்சரிக்கை : சுற்றுலாப் பயணங்களை தவிருங்கள்: அனர்த்த முகாமைத்துவ மையம் வேண்டுகோள்!!

119

இலங்கையின் மத்திய மலைநாடு உள்ளிட்ட மழைப் பாதிப்புள்ள பகுதிகளுக்குத் திட்டமிடப்பட்டுள்ள சுற்றுலா மற்றும் பயணங்களை மறுபரிசீலனை செய்யுமாறும், தேவையற்ற பயணங்களைத் தவிர்க்குமாறும் பொதுமக்களுக்கு அனர்த்த முகாமைத்துவ மையம் (DMC) அவசர கோரிக்கை விடுத்துள்ளது.

மத்திய மாகாணம், குருநாகல், மேல் மாகாணம் மற்றும் இரத்தினபுரி ஆகிய பகுதிகளில் தற்போது பலத்த மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில், பதுளை, கண்டி, கேகாலை, குருநாகல், நுவரெலியா மற்றும் இரத்தினபுரி உள்ளிட்ட இடங்களில் மலைப்பாங்கான வீதிகளில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் பாறைச் சரிவுகள் மற்றும் மண் சரிவுகள் குறித்து அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

அத்துடன், பயணங்களை மேற்கொள்வதற்கு முன்னர் வீதி நிலவரங்களை அறிய அனர்த்த முகாமைத்துவ மையத்தின் 117 என்ற இலவச உடனடி அழைப்பு இலக்கத்தைத் தொடர்புகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களத்தின் கணிப்பின்படி, 2026, அக்டோபர் 25 வரை மழைக்காலநிலை மேலும் தீவிரமடையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.