காதலி இறந்த சோகத்தில் இளைஞன் எடுத்த விபரீத முடிவு!!

25

சேலம் மாவட்டம், ஏற்காடு அருகே காதலி இறந்த துக்கத்தில் 19 வயது வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தலைச்சோலை கிராமத்தைச் சேர்ந்த பாபுவின் மகன் ஸ்ரீகாந்த் (19). இவர் ஏற்காட்டில் உள்ள பெட்ரோல் பங்கில் வேலை செய்து வந்தார். கடந்த 2 வாரங்களுக்கு முன்பு இவரது காதலி உயிரிழந்தார். இதனால் மனவேதனையில் இருந்த ஸ்ரீகாந்த், கடந்த சில நாட்களாக சோகத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், நேற்று மதியம் தனது தாயார் புஷ்பராணியிடம் சோடா வாங்கி வருமாறு கூறி கடைக்கு அனுப்பியுள்ளார். அவர் திரும்பி வருவதற்குள் ஸ்ரீகாந்த் தனது அறையில் தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த ஏற்காடு போலீசார், அவரது உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.