வவுனியாவில் பேருந்து சாரதிகளுக்கு போதைப்பொருள் பரிசோதனை : 5 பேர் அடையாளம்!!

133

இன்றையதினம் (28.10.2026) வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் சேவையில் ஈடுபடும் பேருந்துசாரதிகள் போதைப்பொருள் பயன்படுத்தியுள்ளனரா என்ற பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

வன்னிமாவட்ட பிரதிபொலிஸ்மா அதிபர் இந்திக்க கப்புக்கொட வழிகாட்டலில், தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் வைத்திய நிறுவனத்தின் பங்களிப்புடன் இந்தப் பரிசோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, காலை 10 மணி வரையில் அரச, தனியார் பேருந்துகளின் 65 சாரதிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அவர்களில் ஐந்து பேர் போதைப்பொருள் பயன்படுத்தியமை பரிசோதனைகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டதாகத் பொலிசார் தெரிவித்தனர்.

இவ்வாறு அடையாளம் காணப்பட்ட சாரதிகளுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதுடன், விபத்துக்களையும் குறைக்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டுள்ள இந்தப் பரிசோதனை நடவடிக்கை, இன்று நாள் முழுவதும் தொடர்ந்து முன்னெடுக்கப்படவுள்ளது.