கடும் நோயால் பாதிக்கப்பட்டுள்ள VJ ரம்யா ரசிகர்களுக்கு அறிவுரை!!

25

தமிழ் சின்னத்திரையில் மிகவும் பிரபலமான தொகுப்பாளினிகளில் ரம்யாவும் ஒருவர். ரம்யா , தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தாண்டி தனியார் நிகழ்ச்சிகள், விருது விழா, யூடியூப் பேட்டிகள் என ஆக்டீவாக இருக்கிறார்.

அதுமட்டுமில்லாமல் பிட்னஸ் பற்றியும் நிறைய விஷயங்களை பகிர்ந்த வண்ணம் இருப்பார்.நிறைய விஷயங்களை பகிர்ந்த ரம்யா தனக்கு ஏற்பட்டுள்ள நோய் குறித்து கூறியுள்ளார். எனக்கு மிக கிரிட்டிகலான ஒரு நரம்பியல் பிரச்சினை கண்டறியப்பட்டது.

நான் எப்போதும் உடலை ‘ஃபிட்டா’ வைத்துக்கொள்ளுங்கள் என்று அனைவருக்கும் சொல்லிக்கொண்டே இருப்பேன். ஆனால், என் முழு உடலையும் கட்டுப்படுத்தும் மூளையின் ஆரோக்கியத்தை நான் கவனிக்காமல் விட்டுவிட்டேன்.மூளை என்பது ஒரு இயந்திரம் கிடையாது, எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் தொடர்ந்து வேலை வாங்கக்கூடிய கருவியாக மூளையைப் பயன்படுத்தக் கூடாது.

தூக்கத்தை புறக்கணித்துவிட்டு தொடர்ந்து இரவு பகலாக இயங்கிக்கொண்டிருப்பதை பெருமையாக நினைப்பதை தூக்கி எறியுங்கள். மூளைக்கும் உடலுக்கும் தேவையான ஓய்வை கொடுங்கள் என அட்வைஸ் கூறியுள்ளார் தொகுப்பாளினின் ரம்யா.