கடவுச்சீட்டு பெறுவதற்கு நாளை முதல் கட்டாயமாகும் நடைமுறை!!

26

ஒரு நாள் மற்றும் சாதாரண சேவை ஆகிய இரு பிரிவுகளின் கீழும் கடவுச்சீட்டுகளைப் பெறுவதற்காக பிராந்திய அலுவலகங்களுக்கு வரும் விண்ணப்பதாரர்கள், நாளை (29.10.2026) முதல் இணையவழியில் முன்பதிவு செய்ய வேண்டும் என குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதன்படி, விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட சேவைகளுக்கு விண்ணப்பிப்பதற்காக பிராந்திய அலுவலகங்களுக்குச் செல்வதற்கு முன்பாக, இணையவழியில் ஒரு திகதியையும் நேரத்தையும் முன்பதிவு செய்ய வேண்டும்.

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் தனது அதிகாரபூர்வ இணையதளத்தில், ‘பிராந்திய அலுவலகங்களில் கடவுச்சீட்டு விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க திகதி மற்றும் நேரத்தை முன்பதிவு செய்யுங்கள்’ என்ற தலைப்பிலான இணைப்பு மூலம் இந்தச் செயல்முறையை எளிதாக்கியுள்ளது.

இருப்பினும், பத்தரமுல்லையில் உள்ள திணைக்களத்தின் தலைமை அலுவலகத்தில் சேவைகள் வழக்கம் போல் தொடரும் என்று அதன் ஊடகப் பேச்சாளர் மகேஷ் கருணாதாச தெரிவித்துள்ளார்.