நவம்பர் முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ள TIN எண் பொதுமக்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்!!

94

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் எதிர்வரும் நவம்பர் 1, 2026 முதல் TIN சான்றிதழ் சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த 1.3 கோடிக்கும் (13 மில்லியன்) அதிகமான மக்கள் தங்களது வரி செலுத்துவோர் அடையாள எண்ணை (TIN) பெற்றுள்ளதாக உள்நாட்டு வருவாய்த் திணைக்களம் (IRD) தெரிவித்துள்ளது.

இதற்கமைய, 40 இலட்சம் (4 மில்லியன்) பேர் இந்த எண்ணை பெற்றுக்கொள்ள வேண்டியுள்ளதாகவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. நவம்பர் 1 முதல், 18 வயதை நிறைவு செய்தவர்கள் சில பணிகளை செய்யும்போது செல்லுபடியாகும் வரி செலுத்துவோர் அடையாள எண்ணை (TIN) சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

வங்கி கணக்குத் தொடங்குதல், வாகனப் பதிவு மற்றும் உரிமப் புதுப்பித்தல், காணிப் பதிவு மற்றும் கடன் அட்டை (Credit Card) பெறுதல் போன்ற முக்கிய அன்றாட நடவடிக்கைகளுக்கு இந்த TIN சான்றிதழ் சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

TIN இலக்கம் இல்லாதவர்கள் சட்டரீதியான அபராதங்களைத் தவிர்க்கும் பொருட்டு, Inland Revenue Department (IRD) இணையதளம் ஊடாக உடனடியாகப் பதிவு செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றார்கள்.