நள்ளிரவு முதல் எரிபொருள் விலை உயர்வு : முச்சக்கர வண்டி கட்டணங்களில் மாற்றம்!!

23

நேற்று நள்ளிரவு முதல் உயர்ந்துள்ள எரிபொருள் விலைக்கு ஏற்ப முச்சக்கர வண்டிகளுக்கான கட்டணங்களை உயர்த்த திட்டமிட்டுள்ளதாக தேசிய கூட்டு முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் தொழிலதிபர்கள் சங்கம் (JNJIA) அறிவித்துள்ளது.

கடந்த மாதம் கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில், எமது சங்கம் கோரிக்கை விடுத்த நிலையில் எந்தப் பதிலும் வரவில்லை. எனவே ​​இம்மாதமும் உயர்த்தப்பட்டுள்ளது என அச்சங்கத்தின் பொதுச் செயலாளர் எல். ரோஹன பெரேரா தெரிவித்துள்ளார்.

தற்போது, ​​ ரூபாயாக 25 உயர்ந்துள்ளது. இதனுடன் ஒப்பிடுகையில், நாங்கள் பயன்படுத்தும் எல்லாவற்றின் விலையும் அதிகரித்துள்ளது.

தற்போது, முதல் கிலோமீட்டருக்கான கட்டணம் ரூ. 120 ஆகவும், இரண்டாவது கிலோமீட்டரிலிருந்து தற்போது ரூ. 90 ஆகவும் திருத்தப்பட வேண்டும். அது ரூ. 100 ஆக அதிகரிக்க வேண்டும் என்பதே எங்கள் பரிந்துரை என்றும் கூறியுள்ளார்.

இந்த யோசணை தேசிய போக்குவரத்து ஆணையத்திடம் கொண்டு செல்லப்பட்டு அடுத்த சில நாட்களில் பதில் இல்லையென்றால், மீட்டர்களை திருத்தும் நிறுவனங்களிடம் கலந்துரையாட திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.