வெளிநாட்டிலிருந்து வந்து திருகோணமலையில் தொழில்துறையில் ஈடுபட்டவர் படுகொலை : வெளியான அதிர்ச்சித் தகவல்!!

115

அண்மையில் திருகோணமலையில் படுகொலை செய்யப்பட்ட தொழிலதிபர் தொடர்பான தகவல்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். தென்கொரியாவில் சுமார் 8 ஆண்டுகள் உழைத்துச் சேர்த்த பணத்தில் திருகோணமலையில் சுற்றுலா விடுதி ஒன்றை நடத்தி வந்துள்ளார்.

இந்நிலையில் அவரது கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலிக்காக அவரது விடுதியிலேயே கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளதாக விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

கடந்த 20ஆம் திகதி திருகோணமலை சிங்கபுர பகுதியில் இடம்பெற்ற இந்த கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் கடந்த 28ஆம் திகதி இரத்மலானை பகுதியில் வைத்துக் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு படுகொலை செய்யப்பட்டவர் 55 வயதுடைய நிமல் கொஸ்கொல்ல என்ற திருமணகமாகாத தொழிலதிபர் என தெரியவந்துள்ளது.

வெளிநாட்டு வேலையை முடித்துக்கொண்டு இலங்கை திரும்பிய அவர், சிங்கபுர 4ஆம் கட்டை பகுதியில் விடுதி ஒன்றை நிர்மாணித்து நடத்தி வந்ததோடு, அதிலிருந்த ஒரு அறையிலேயே தங்கியும் இருந்துள்ளார்.

இந்த நிலையில் அந்த விடுதியிலேயே தங்கி திருகோணமலையில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வந்த நபர் ஒருவரே இந்த கொலையை செய்துள்ளார். இரத்மலானை பகுதியைச் சேர்ந்த இந்தச் சந்தேகநபர் பலரிடம் கடன் பட்டிருந்ததாக தெரியவந்துள்ளது.

அந்தப் கடன்களிலிருந்து மீள்வதற்காகத் தொழிலதிபரின் கழுத்திலிருந்த தங்கச் சங்கிலியை கொள்ளையிடும் நோக்கிலேயே இக்கொலையைச் செய்துள்ளார். கொலையின் பின்னர் தங்கச் சங்கிலியை எடுத்துக்கொண்டு தப்பியோடிய சந்தேகநபர், அதைத் தனது மனைவியிடம் கொடுத்துள்ளார்.

பின்னர் அவரது மனைவி கொழும்பில் உள்ள நகைக்கடை ஒன்றில் அந்தச் சங்கிலியை 11 லட்சம் ரூபாவிற்கு விற்பனை செய்துள்ளார். அந்தப் பணத்தைத் தனது வங்கிப் கணக்கில் வைப்பு செய்து, பல்வேறு சந்தர்ப்பங்களில் கடன்களை அடைத்துள்ளமை சந்தேகநபரிடம் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.