இலங்கையில் எச்.ஐ.வி தொற்றாளர்கள் அதிகரிப்பு!!

23

இலங்கையில் 2026ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் 487 புதிய எச்.ஐ.வி தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர். இது கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 13.3% அதிகரிப்பாகும்.

தேசிய பாலியல் நோய் மற்றும் எச்.ஐ.வி கட்டுப்பாட்டுத் திட்டத்தின் புள்ளிவிபரங்களின்படி, முதல் காலாண்டில் 249 புதிய தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர். 2026ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் ஆண், பெண் தொற்றாளர்களின் விகிதம் 7:1 ஆகக் காணப்பட்டது. மேலும், 15–24 வயதுக்குட்பட்ட 55 இளைஞர்கள் எச்.ஐ.வி தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.

இவர்களில் 48 ஆண்கள், 6 பெண்கள் மற்றும் ஒரு திருநங்கை அடங்குகின்றனர். 2026ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் எச்.ஐ.வி தொடர்பான 8 மரணங்கள் பதிவாகியுள்ளன.

இலங்கையில் இதுவரை எச்.ஐ.வி தொடர்பாக மொத்தம் 820 மரணங்கள் பதிவாகியுள்ளன. மேலும், தாயிடமிருந்து குழந்தைக்குப் பரவிய 117 எச்.ஐ.வி தொற்றுச் சம்பவங்களும் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளன.