
குழந்தைகள் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள 3 வயது சிறுவன், தன்னை வளர்த்த பெற்றோருடன் வீட்டிற்குச் செல்ல வேண்டும் என கெஞ்சும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சரிதா மற்றும் ஸ்ரீனிவாஸ் என்ற தம்பதி, 3 ஆண்டுகளுக்கு முன்பு, பிறந்து 5 நாட்களே ஆன தாயை இழந்த ஆண் குழந்தையை தங்களது பராமரிப்பில் எடுத்து வளர்த்து வந்துள்ளனர். கடந்த 3 ஆண்டுகளாக சிறுவனை சொந்த மகனைப் போலவே வளர்த்து வந்ததால், சிறுவனுக்கும் அந்தத் தம்பதிக்கும் இடையே நெருக்கமான பாசம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், சட்டப்படி முறையான தத்தெடுப்பு நடைமுறைகளைப் பின்பற்றவில்லை எனக் கூறி, அதிகாரிகள் சிறுவனை தம்பதியிடமிருந்து பிரித்து குழந்தைகள் காப்பகத்தில் சேர்த்துள்ளனர். இதற்கிடையில், சிறுவனைப் பார்க்க தம்பதி காப்பகத்திற்குச் சென்றுள்ளனர். அப்போது, தன்னை வீட்டிற்கு அழைத்துச் செல்லுமாறு சிறுவன் கெஞ்சியுள்ளார்.
இதனால், அந்த தம்பதி கண்ணீர் விட்டு அழுதுள்ளனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. இதுகுறித்து அவர்கள், இந்து முறைப்படி குழந்தையைத் தத்தெடுத்ததாகவும், இதுதொடர்பாக உயர்நீதிமன்றத்தை அணுகியதாகவும் தெரிவித்துள்ளனர்.
மேலும், கடந்த அக்டோபர் 16, 2026 அன்று சிறுவனை தங்களிடம் ஒப்படைக்குமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதாகவும் கூறியுள்ளனர்.
ஆனால், நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டும் அதிகாரிகள் சிறுவனை ஒப்படைக்காமல் காலதாமதம் செய்து வருவதாக தம்பதி குற்றம்சாட்டியுள்ளனர்.
மேலும், தங்களைப் பிரிந்ததால் சிறுவன் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவனது உடல்நிலையும் பாதிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர். எனவே, நீதிமன்ற உத்தரவின்படி சிறுவனை உடனடியாக தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
HEARTBREAKING | INCIDENT JAGTIAL
“Please take me away, Mother… I’m scared!”
A three-year-old boy cries for his parents at a child welfare centre. Despite a High Court order dated October 16 directing his return, the parents allege authorities are delaying the handover. https://t.co/oGOyIR3mXD
— Karthik (@Wanderwthkarth) November 2, 2026





