யாழில் கோர விபத்து : வீதியில் தூக்கி வீசப்பட்ட இளைஞர்கள்!!

13

யாழ்ப்பாணம் – ஊர்காவற்றுறை பிரதான வீதியின் அராலிச் சந்திக்கு அண்மையில் இடம்பெற்ற விபத்தில் மூன்று இளைஞர்கள் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த விபத்து இன்று (04) காலை இடம்பெற்றுள்ளது.

ஊர்காவற்றுறை திசையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி அதிவேகமாகப் பயணித்த முச்சக்கரவண்டி, சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்தில் இருந்த தொலைத்தொடர்புக் கம்பத்துடன் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

இதன்போது முச்சக்கரவண்டியில் பயணித்த மூன்று இளைஞர்களும் தூக்கி வீசப்பட்டு, படுகாயமடைந்த நிலையில் வீதியில் கிடந்துள்ளனர்.

இதனையடுத்து அவ்வழியாகச் சென்ற பொதுமக்கள் விரைந்து செயற்பட்டு, தனியாருக்குச் சொந்தமான இரண்டு முச்சக்கரவண்டிகளின் உதவியுடன் காயமடைந்தவர்களை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு சென்று அனுமதித்துள்ளனர். இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஊர்காவற்றுறைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.