நடுவீதியில் மர்மமாக உயிரிழந்துகிடந்த இளம் மருத்துவ பீட மாணவி : கணவர் வெளியிட்ட வாக்குமூலம்!!

7

காலி- கராபிட்டிய மருத்துவ பீட மூன்றாம் ஆண்டு மருத்துவ மாணவியொருவர் தொடருந்து கடவைக்கு அருகில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நேற்று அதிகாலை (03.11.2026) பாலத்திற்கு அருகில் உள்ள தொடருந்து தண்டவாளத்தை ஆய்வு செய்ய வந்த திணைக்கள ஊழியர் ஒருவர் வீதியில் கிடந்த பெண்ணின் சடலத்தை பார்த்து பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

இதனையடுத்து பொலிஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளதுடன், இளம் பெண்ணின் உடலுக்கு அருகில், அவரது கைபேசி திடீரென ஒலித்துள்ளதை அவதானித்துள்ளனர்.

காலி பொலிஸ் அதிகாரி ஒருவர் அந்த அழைப்பிற்கு பதிலளித்த நிலையில், மறுமுனையில் பெண்ணின் கணவர் பதிலளித்த நிலையில், மனைவிக்கு நேர்ந்த துயர சம்பவம் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் உயிரிழந்தவர், காலியில் உள்ள கராபிட்டிய மருத்துவ பீடத்தில் மூன்றாம் ஆண்டு மருத்துவ மாணவியான 25 வயதுடைய பெலியத்த, வலஸ்முல்ல வீதியைச் சேர்ந்த படபெண்டி கவிந்தி யுக்மணி சில்வா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கணவரின் வாக்குமூலத்தின்படி, மரணத்திற்கு முன்பு இருவருக்கும் இடையே சில வாக்குவாதம் இருந்ததாகவும், அவர் தற்கொலை செய்துகொள்ளும் நிலையில் இருந்ததாகவும் தகவல் கிடைத்துள்ளது. இருப்பினும், மர்ம மரணத்திற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

இந்த மரணம் பெண்ணின் மீது தொடருந்து மோதியதால் ஏற்பட்ட விபத்தா அல்லது தற்கொலையா என்பதை கண்டறிய காலி பொலிஸார் விசாரணையை தொடங்கியுள்ளனர். மாணவியின் உடலுக்கான பிரேத பரிசோதனை இன்று (4) கராபிட்டிய மருத்துவமனையில் நடைபெற உள்ளது. இச்சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.