இந்தியாவில் திடீரென உயிரிழந்த இலங்கை கடற்படை அதிகாரி!!

10

இந்தியாவில் நடைபெற்ற BIMSTEC கடல்சார் பாதுகாப்புப் பயிற்சியில் பங்கேற்றிருந்த இலங்கை கடற்படை அதிகாரியொருவர் திடீர் உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார். இலங்கை கடற்படையின் SLNS கஜபாகு கப்பல் குழுவைச் சேர்ந்த கொமாண்டர் எஸ்.ஏ.எஸ்.எம். சமரக்கோன் என்பவரே உயிரிழந்துள்ளார்.

இவர் நவம்பர் 02 ஆம் திகதி இந்தியாவின் ஸ்ரீ விஜயபுர பகுதியில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த அதிகாரியின் திடீர் மறைவுக்கு இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளது.

இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் தகவலின்படி, கொமோண்டோ சமரகோன் இந்தியாவில் நடைபெறும் பிம்ஸ்டெக் கடல்சார் பாதுகாப்பு பயிற்சியில் பங்கேற்ற இலங்கை கடற்படைக் குழுவின் ஒரு உறுப்பினராவார்.

இந்நிலையில், உயிரிழந்த அதிகாரியின் பூதவுடல் செவ்வாய்க்கிழமை (03) இந்திய விமானப்படைக்குச் சொந்தமான C-130 ரக விமானம் மூலம் கொழும்புக்குக் கொண்டுவரப்பட்டது. அன்னாரின் பூதவுடல் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டதை உறுதிப்படுத்திய இந்திய உயர்ஸ்தானிகராலயம், அதிகாரியின் மறைவுக்கு மீண்டும் தனது இரங்கலைத் தெரிவித்துள்ளது.