இக்கட்டான நிலையில் மக்கள் : லிட்ரோ நிறுவனம் எடுத்துள்ள அவசர நடவடிக்கை!!

12

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள எரிவாயு நெருக்கடிக்கு தீர்வாக லிட்ரோ நிறுவனம் வழக்கமாக சந்தைக்கு வெளியிடும் எரிவாயு அளவை விட 12,000 மெட்ரிக் டொன்கள் கூடுதலாக வெளியிடப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுவதாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நலிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

நாட்டின் மாதாந்திர எரிவாயு தேவை 38,000 மெட்ரிக் டொன்கள் ஆகும், ஆனால் தற்போதைய சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு, இந்த மாதம் 44,000 மெட்ரிக் டொன்களை சந்தைக்கு வெளியிட லிட்ரோ நடவடிக்கை எடுத்துள்ளது.

எனவே, தேவையற்ற பீதி ஏற்படடாது என்றும், பல இடங்களில் எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு தீர்வுகள் காணப்படும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்த முடிவுகள் குறித்து அமைச்சரவைக்கு தெரிவிப்பதற்காக, நேற்று (03) பிற்பகல் அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் பங்கேற்றபோது இவ்வாறு குறிபிட்டுள்ளார்.

எரிவாயு சந்தையின் 85% லிட்ரோ நிறுவனத்தால் வழங்கப்படுகின்றது. நமது நாட்டின் மாதாந்திர எரிவாயு தேவை 38,000 மெட்ரிக் டொன்கள் ஆகும். இதில், 32,000 மெட்ரிக் டொன்களை லிட்ரோ நிறுவனம் வழங்குகிறது. லாக்ஸ் நிறுவனம் 6,000 மெட்ரிக் டொன்களை வழங்குகிறது.

தற்போதைய சூழ்நிலையின் அடிப்படையில், லிட்ரோ நிறுவனம் மாதந்தோறும் 44,000 மெட்ரிக் டொன்கள் எரிவாயுவை சந்தைக்கு வெளியிடுகிறது. முதல் 15 நாட்களில், 25,000 மெட்ரிக் டொன்கள் வெளியிடப்படுகின்றன.

இதில், கடந்த மூன்று நாட்களில் 11,700 மெட்ரிக் டொன்கள் சந்தைக்கு வெளியிடப்பட்டுள்ளன. எதிர்காலத்தில் 19,000 மெட்ரிக் டொன்கள் இறக்குமதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும், லிட்ரோ நிறுவனம் வழக்கமாக சந்தைக்கு வெளியிடும் எரிவாயு அளவை விட 12,000 மெட்ரிக் டொன்கள் கூடுதலாக வெளியிடப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

நுகர்வோர் விவகார ஆணையம் லாக்ஸ் நிறுவனத்திற்கு எதிராக ஒரு வழக்கு பதிவு செய்துள்ளது. குறிப்பிட்ட காலத்திற்குள் வழங்காததற்காக இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், லிட்ரோ நிறுவனம் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது. 32,000 மெட்ரிக் டொன்களை வெளியிடும் நிறுவனம், தற்போது அதை 44,000 மெட்ரிக் டொன்களாக உயர்த்துகிறது.

எனவே தேவையற்ற பீதியை உருவாக்க வேண்டிய அவசியமில்லை. லாஃப்ஸ் நிறுவனம் விரைவாக விநியோகிக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். பல இடங்களில் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டுள்ளன. லிட்ரோ நிறுவனம் இந்த 44,000 மெட்ரிக் டொன்களை இந்த மாதம் சந்தையில் வெளியிடும் என்று அவர் கூறியுள்ளார்.