வவுனியாவில் பாவனையாளர் அதிகார சபை விசேட சுற்றிவளைப்பு : பதுக்கி வைக்கப்பட்ட 33 எரிவாயு கொள்கலன்கள் மீட்பு!!

21

நாட்டில் கடந்த சில நாட்களாக நிலவி வரும் எரிவாயு கொள்கலன்களுக்கான தட்டுப்பாட்டைக் கருத்திற் கொண்டு, பாவனையாளர் அதிகார சபையினால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு அங்கமாக, வவுனியாவில் நேற்றும் இன்று முன்னெடுக்கப்பட்ட தீவிர தேடுதல் மற்றும் சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, லிட்ரோ (Litro) எரிவாயு கொள்கலன்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வவுனியாவின் பிரதான எரிவாயு விநியோகஸ்தர் ஒருவரால் சட்டவிரோதமான முறையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 33 லிட்ரோ எரிவாயு கொள்கலன்கள் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டு மீட்கப்பட்டுள்ளன.