28 வயது மனைவியை குத்திக் கொலை செய்த 55 வயது கணவர் 2 மகள்களுடன் காவல் நிலையத்தில் சரண்!!

15

பீகார் மாநிலம் முங்கரில் குடும்பத் தகராறு காரணமாக இளம்பெண் ஒருவர் கணவரால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மனைவியைக் கொலை செய்ததாகக் கூறப்படும் ஓய்வுபெற்ற ரயில்வே லோகோ பைலட், தனது இரு மகள்களுடன் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

தசரத் மண்டல் (55) என்பவருக்கும், அவரது மனைவி பூஜா தேவி (28) என்பவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அப்போது ஆத்திரமடைந்த தசரத், பூஜாவைக் கத்தியால் குத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதில் பலத்த காயமடைந்த அவர் உயிரிழந்தார்.

சம்பவத்துக்குப் பிறகு தசரத் மண்டல் தனது இரு சிறுமிகளையும் அழைத்துக்கொண்டு காவல் நிலையத்துக்குச் சென்று சரணடைந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கிடையே, பூஜா தேவியின் சகோதரர் தனது சகோதரியின் மரணத்துக்குக் வரதட்சணைக் கொடுமையே காரணம் எனப் புகார் அளித்துள்ளார். இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.குடும்பத் தகராறில் இளம்பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.