
காரைநகர், கள்ளித்தெரு, தங்கோடையைப் பிறப்பிடமாகவும், வவுனியாவில் வசித்தவருமாகிய இராமச்சந்திராஸ் உரிமையாளர் சுப்பிரமணியம் இராமச்சந்திரன் அவர்கள் 12.11.2026 வியாழக்கிழமை அன்று கொழும்பில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், சின்னம்மா தம்பதிகளின் அன்பு மூத்தமகனும், பலகாட்டைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான கந்தசாமி, பத்தினியம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
பத்மராணி அவர்களின் அன்புக்கணவரும், இளங்கோவன், கெளதமி மற்றும் காயத்திரி ஆகியோரின் பாசமிகு தந்தையும், சங்கவை, கோபிநாத் ஆகியோரின் அன்பு மாமனாரும், கிருத்திகன், குயிலினி, ஆகியோரின் பாசமிகு பேரனும், மகாலிங்கம், அமிர்தலிங்கம், இராஜேஸ்வரி ஆகியோரின் பாசமிகு சகோதரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 14.11.2026 சனிக்கிழமை காலை 9.00 மணி முதல் மாலை 3.30 மணி வரை பார்வைக்காகவும், 15.11.2026 ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணி முதல் பொரளை ஜெயரட்ன மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, நண்பகல் 12.30 மணிக்கு இறுதிக்கிரியைகள் நடைபெற்று மதியம் 2.30 மணிக்கு பொன்னாலை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
தகவல் : குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு : 0778135807





