காலிமுகத்திடலில் ஆரம்பமான வரலாற்றுப் பயணம் : சைக்கிளில் புதுடெல்லி செல்லும் 24 மாணவர்கள்!!

13

இந்திய – இலங்கை நாடுகளுக்கு இடையிலான நட்புறவு மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில், முதலாவது இந்தியா – இலங்கை தேசிய மாணவர் படையணியின் (NCC) சைக்கிள் பயணம் ‘மைத்ரி சேது யாத்ரா’ என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதன் ஆரம்ப நிகழ்வு நேற்று (15) கொழும்பு காலிமுகத்திடலில் நடைபெற்றது. இதன்படி, இந்திய மற்றும் இலங்கையைச் சேர்ந்த 24 மாணவர் படையினர், கொழும்பிலிருந்து புதுடெல்லி வரை சுமார் 3,500 கிலோமீற்றர் தூரத்தை சைக்கிளில் பயணித்தனர்.

இந்த நிகழ்வில் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் சுனில் குமார கமகே, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொந்தா உள்ளிட்ட இரு நாடுகளின் முக்கிய அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இளைஞர்களிடையே தலைமைத்துவம், ஒழுக்கம் மற்றும் குழு ஒத்துழைப்பை மேம்படுத்துவதுடன், இந்தியா – இலங்கை நட்புறவை மேலும் வலுப்படுத்துவதும் இந்தப் பயணத்தின் முக்கிய நோக்கமாகும்.