உச்சம் தொட்ட தேசிக்காய் விலை : 2,000 ரூபாவைத் தாண்டியது!!

5

ஹட்டன் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் எலுமிச்சம்பழம் விலை தற்போது கடுமையாக உயர்ந்து, ஒரு கிலோகிராம் ரூபாய் 2,000/- வரை அதிகரித்துள்ளதாக பிரதேசவாசிகள் கூறுகின்றனர்.

எலுமிச்சம்பழம் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளதன் காரணமாக, எலுமிச்சம்பழத்தை விலைக்கு வாங்க முடியாத அசாதாரண சூழல் ஏற்பட்டுள்ளதாகத் கவலை தெரிவிக்கின்றனர்.

நகரின் வர்த்தகர்கள் சிலர் குறிப்பிடுகையில், “தற்போது சந்தையில் கடுமையான எலுமிச்சம்பழத் தட்டுப்பாடு நிலவுகிறது. , சந்தைக்குக் கிடைக்கும் குறைந்தளவிலான எலுமிச்சம்பழத் தொகையின் மொத்த விற்பனை விலை அதிகரித்துள்ளமையே இந்த விலை உயர்வுக்கு முக்கியக் காரணம் என தெரிவித்தனர்.