உலக சந்தையில் தங்கத்தின் விலை கடுமையாக சரிவு : இலங்கையில் பதிவாகியுள்ள விலை!!

172

மத்திய கிழக்கில் மீண்டும் மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில் உலக சந்தையில் தங்கத்தின் விலை கடுமையாக சரிந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை தற்போது 3,774 அமெரிக்க டொலராக இன்று (18) குறைந்துள்ளது.

உலக சந்தையில் தங்கத்தின் விலை சரிவிற்கமைய, இலங்கையிலும் தங்கத்தின் விலை 3,000 ரூபாயினால் குறைந்துள்ளது. அதன்படி, ஒரு பவுண் 22 கரட் தங்கத்தின் விலை இன்று (18) ரூ.326,600 ஆக உள்ளதுடன், நேற்று அதன் விலை ரூ.329,400 ஆகவும் பதிவாகியுள்ளது.

அதேபோல், ஒரு பவுண் 24 கரட் தங்கத்தின் விலை இன்று ரூ.355,000 ஆகவும் குறைந்துள்ளதுடன், நேற்று அதன் விலை ரூ.358,000 ஆக பதிவாகியுள்ளது.