திருப்பதி ஏழுமலையானுக்கு 121 கிலோ தங்கம் காணிக்கையாக வழங்கும் சென்னை தொழிலதிபர்!!

8

சென்னையை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர், திருப்பதி ஏழுமலையானுக்கு121 கிலோ தங்க ஆபரணங்களை காணிக்கையாக வழங்க முன்வந்துள்ளார். ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள ஏழுமலையான் கோவிலுக்கு உலகம் முழுவதுமிருந்து ஏராளமான பக்தர்கள் தங்க நகைகளை காணிக்கையாக வழங்குவது வழக்கம் ஆகும்.

இந்நிலையில், சென்னையை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் 121 கிலோ தங்க ஆபரணங்களை காணிக்கையாக வழங்க முன்வந்துள்ளார். இதுவே அந்த கோவிலுக்கு இதுவரை வழங்கப்பட்ட மிகப்பெரிய தனிநபர் நன்கொடையாக உள்ளது.

பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட 9 தொகுப்புகளை உள்ளடக்கிய மொத்தம் 45 வகையான தங்க ஆபரணங்கள், நவம்பர் 26 அன்று திருமலையில், திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD) அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படைக்க உள்ளார்.

இந்த தங்க ஆபரணங்களின் மதிப்பு சுமார் ரூ.160 கோடி வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தங்க ஒப்படைப்பு நிகழ்வின் போது, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவும் உடனிருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தனது அடையாளத்தை வெளியிட வேண்டாம் என கோரிக்கை விடுத்துள்ள அந்த நபர், ஏழுமலையான் பெயரில் தொழில் தொடங்கி தனது நிறுவனத்தின் 60 சதவீத பங்குகளை விற்று, சுமார் (இந்திய மதிப்பில் சுமார் 13,000 கோடி) வரை ஈட்டியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தனது தொழில் ஏழுமலையான் தான் காரணம் என கருதும் அந்த தொழிலதிபர், அதை அவருக்கு திருப்பி அளிக்க முன்வந்துள்ளதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவிடம் தெரிவித்துள்ளார்.