வவுனியா பொது வைத்தியசாலையில் பாம்பு தீண்டிய யுவதி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!!

284

நெடுங்கேணி சின்னப்பூவரசங்குளம் பகுதியில் கடந்த வாரம் பாம்பு தீண்டிய 21 வயது யுவதி ஒருவர், வவுனியா பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று (25.11.2026) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

சின்னப்பூவரசங்குளம் பகுதியைச் சேர்ந்த குறித்த யுவதி கடந்த வாரம் பாம்பு தீண்டிய நிலையில் நெடுங்கேணி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அங்கு முதலுதவி மற்றும் ஆரம்பக்கட்ட சிகிச்சைகள் அளிக்கப்பட்ட போதிலும், மேலதிக சிகிச்சைகளுக்காக அவர் வவுனியா பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

வவுனியா பொது வைத்தியசாலையில் தொடர்ச்சியாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். உயிரிழந்த யுவதியின் சடலம் வவுனியா பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.