மாந்திரீக சடங்கிற்காக கொலை செய்யப்பட்ட 3 வயதுச் சிறுமி!!

5

உத்தரப் பிரதேச மாநிலத்தில் மாந்திரீக சடங்கிற்காக 3 வயது சிறுமி கொலை செய்யப்பட்டதாக வெளியாகியுள்ள செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் புலந்த்ஷஹர் மாவட்டத்தில் 3 வயது பெண் குழந்தையான வானியா கடந்த சனிக்கிழமை காலை 11 மணியளவில் வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த போது திடீரென காணாமல் போனது.

குழந்தை காணாமல் போனதால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் மற்றும் அவர்களின் நண்பர்கள் அப்பகுதி முழுவதும் தீவிரமான தேடியதோடு காவல்துறையினரிடமும் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் அப்பகுதியை சுற்றி இருந்த சிசிடிவி காட்சிகளை சோதனை செய்தனர்.

அப்போது குழந்தை வீட்டை விட்டு அதிக தூரம் செல்லவில்லை என்பதை கண்டறிந்த பொலிஸார், சிறுமியின் வீட்டிற்கு அருகில் இருந்த வீடுகளை சோதனையிட்டனர்.

அப்போது மேப்ப நாய்கள் நேராக சிறுமியின் பக்கத்து வீட்டிற்கு சென்றுள்ளது. இதையடுத்து அங்குள்ள சாக்குப்பை திறந்த பார்த்த காவல்துறையினர் அதில் சிறுமி வானியா சடலமாக கிடப்பதை கண்டுபிடித்தனர்.

சிறுமி உடல் மீட்கப்பட்ட வீட்டில் இருந்த பெண் மாந்திரீக செயல்களில் ஈடுபட்டு வந்தது முதற்கட்ட விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.

எனவே குழந்தை மாந்திரீக சடங்கிற்காக கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகம் எழுப்பியுள்ளனர். தற்போது சம்பந்தப்பட்ட பெண் கைது செய்யப்பட்டு தீவிர விசாரணை செய்யப்பட்டு வருகிறார்.