50 பயணிகளுடன் பயணித்த தனியார் பேருந்து லொறியுடன் மோதி விபத்து!!

219

இரத்தினபுரி – ஹிடெல்லன பகுதியில் தனியார் பேருந்து ஒன்றும் டிப்பர் ரக வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 11 பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்களில் ஐவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்து இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் குறித்த தனியார் பேருந்தில் 50 பயணிகள் பயணித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், காயமடைந்தவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.