01.10.2014 இன்று சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு வவுனியா அருகம் புல்வெளிய பாடசாலை அதிபர் திரு ஜானக அவர்களின் வேண்டுகோளுக்க அமைவாக ஆண்டு 01, ஆண்டு 02ல் கல்வி கற்கும் 40 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் பாடசாலை மண்டபத்தில் வைத்து வழங்கி வைக்க பட்டது
இந்த நிகழ்வில் தமிழ் விருட்சம் சமுக ஆர்வலர்கள் அமைப்பின் சந்திரகுமார் (கண்ணன் ), பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் மீள் எழுச்சி வவுனியா மாவட்ட பிரதி திட்ட பணிப்பாளர் திருடி.எ.டி.ரஞ்சித், அதிபர் திரு ஜானக உட்பட ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர் .
அதிபர் தனதுரையில் வருங்கால மாணவ செல்வங்களில் மனதில் இனி ஒற்றுமையும் பேதமின்றி வாழ சந்தர்பங்களையும் உருவாக்க அனைவரும் முயற்சி செய்ய வேண்டும் எனவும் அதற்க்கு சந்திரகுமார் (கண்ணன் )அவர்களின் முயற்சி பாராட்ட தக்கது எனவும் ,எனது வேண்டுகோளை ஏற்று கற்றல் உபகரணங்கள் வழங்கி வைத்தமைக்கு நன்றியையும் தெரிவித்து கொண்டார் .
பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் மீள் எழுச்சி வவுனியா மாவட்ட பிரதி திட்ட பணிப்பாளர் திரு டி.எ.டி.ரஞ்சித் அவர்கள் தனதுரையில் மிகவும் பின்தங்கிய இந்த கிராமத்துக்கு மாணவர்களின் வறிய நிலையை கருத்தில் கொண்டு கற்றல் உபகரணங்கள் வழங்கிய எமது அமைச்சின் ஊழியரும் ,சமுக சேவையாளருமான கண்ணனுக்கு நன்றி தெரிவித்து கொண்டதுடன் சமுகத்தின் எதிர்கால தலைவர்களான மாணவர்களே நீங்கள் நன்றாக கற்று நற்பிரஜைகளாக வரவேண்டும் எனவும் சிறுவர்களாகிய உங்களுக்கு எனது சிறுவர் தின நல்வாழ்த்துக்கள் எனவும் கூறி உரையை நிறைவு செய்தார் .
பின்னர் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்க பட்டன. சிறுவர்களின் கலை நிகழ்வுகளும் இடம் பெற்றன. இறுதியில் அதிபரின் நன்றி கூறளுடன் நிகழ்வு முடிவடைந்தது.






