கமல்ஹாசன் மற்றும் சச்சினுக்கு சவால் விட்ட மோடி!!

534

Modi

பிரதமர் மோடி தூய்மை இந்தியா என்ற புதிய விழிப்புணர்வை மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டுமென்பதற்காக இந்தியாவின் முக்கிய ஆளுமைகள் சிலருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

மகாத்மா காந்தியின் 145வது பிறந்த நாளான இன்று காந்தி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய மோடி, பின்னர் தூய்மை இந்தியா என்ற பெயரில் விழுப்புணர்வை ஏற்படுத்த துடைப்பத்தை எடுத்து தெருக்களில் உள்ள குப்பைகளை சுத்தம் செய்துள்ளார்.

பின்னர் அவர் பேசுகையில், சச்சின் டெண்டுல்கர், காங்கிரஸ் தலைவர் சஷி தரூர், தொழிலதிபர் அனில் அம்பானி, சல்மான் கான், பிரியங்கா சோப்ரா, கமல்ஹாசன், யோகா குரு ராம்தேவ் உள்ளிட்டவர்களும் பொதுமக்களும் இந்த சவாலை ஏற்கவேண்டுமென தெரிவித்துள்ளார்.

மேற்குறிப்பிடப்பட்டவர்கள் தெருக்களில் உள்ள குப்பையை அகற்றி அதனை காணொளி மற்றும் புகைப்படங்களுடன் சமூக வலைத்தளங்களில் #mycleanindia என்ற ஹாஷ் டாக்கை பயன்படுத்தி பதிவேற்றுமாறு கூறியுள்ளார்.

இந்த அழைப்பினை ஏற்றுகொண்ட நடிகை பிரியங்கா சோப்ரா, பிரதமர் மோடியின் இந்த சவாலை ஏற்கக் கடமைப்பட்டுள்ளேன் என்று ட்வீட் செய்துள்ளார்.

மேலும், சச்சின் டெண்டுல்கரும் தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் இந்த சவாலை ஏற்பதாக கூறி காணொளி ஒன்றை பதிவேற்றியுள்ளார்.