விக்ரம் பிரபுவைக் கிண்டல் செய்த அஜித்!!

464

Ajith

நடித்த அனைத்து படங்களும் ஹிட் கொடுத்த மகிழ்ச்சியில் உள்ளார் விக்ரம் பிரபு. இவர், மகா கலைஞன் சிவாஜி அவர்களின் பேரன் என்பது அனைவருக்கும் தெரியும். சிவாஜி என்றவுடன் நடிப்பு என்பதை தாண்டி, அவர்கள் வீட்டு விருந்து திரையுலத்தினர் மத்தியில் பிரபலம்.

அப்படியிருக்க சிகரம் தொடு படத்தை சமீபத்தில் பார்த்த அஜித், விக்ரம் பிரபுவிற்கு போன் செய்து படம் மிகவும் நன்றாக உள்ளதாகவும் மேலும் உங்கள் வீட்டு சாப்பாட்டை சாப்பிட்டு எப்படி இத்தனை பிஃட்டாக இருக்கிறீர்கள் என்று ஜாலியாக கேட்டுள்ளார்.

ஏனெனில் சிவாஜி குடும்பத்தினர் அசல் படத்தை தயாரித்த போது அஜித்தை அப்படி கவனித்தார்களாம்.