கோல் ஊன்றிப் பாய்தல் போட்டியில் யாழ். மாணவி புதிய சாதனை!!

1295

Jumb

கோல் ஊன்றி உயரம் பாய்தல் போட்டியில், யாழ்ப்பாண கல்லூரி மாணவி ஒருவர் தேசிய ரீதியில் சாதனை படைத்துள்ளார்.

அகில இலங்கை தேசிய பாடசாலை மெய்வல்லுனர் போட்டிகளில் பங்கேற்றுள்ள அவர் இந்த சாதனையை படைத்துள்ளார்.

யாழ்ப்பாணம் மஹாஜனா கல்லூரியின் மாணவி ஜெகதீஸ்வரன் அனிதா என்ற மாணவியே இவ்வாறு சாதனை படைத்துள்ளார்.

அகில இலங்கை தேசிய பாடசாலை மெய்வல்லுனர் போட்டி கொழும்பு சுகததாச மைதானத்தில் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அதில் அனிதா என்ற குறித்த மாணவி நேற்று இந்த சாதனையை நிலைநாட்டியுள்ளார்.

2012ம் ஆண்டு தேசிய பாடசாலை மட்ட விளையாட்டுப் போட்டியில் அனோமா கருணாசேன என்ற மாணவி 19 வயதுக்கு உட்பட்ட கோல் ஊன்றி உயரம் பாய்தல் போட்டியில் 3.0 மீற்றர் பாய்ந்து சாதனை படைத்திருந்தார்.

இந்த ஆண்டு குறித்த சாதனையை அனிதா 3.32 மீற்றர் உயரம் பாய்ந்து முறியடித்து புதிய சாதனை படைத்துள்ளார்.

பிரதமர் டி.எம். ஜயரட்ன தலைமையில் ஆரம்பமான போட்டித் தொடர்பில் 4,500 மாணவ மாணவியர் பங்கேற்கின்றனர்.