வவுனியா – மாமடுவ வாவி பகுதியில் புதையல் அகழ்வில் ஈடுபட்டுக் கொண்டிருந்த மூவர் இன்று (03.10) அதிகாலை மாமடுவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வவுனியா – போகஸ்வெவ வீதி புனரமைப்பு பணியில் ஈடுபட்டுள்ள ஒப்பந்த நிறுவனம் ஒன்றின் ஊழியர்கள் மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் அநுராதபுரம், கல்கிரியாகம, மற்றும் கெக்கிராவ பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர்களிடம் இருந்து பூஜை பொருட்கள் மற்றும் உபகரணங்கள் மீட்கப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இன்று வவுனியா நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளனர்.