
ஆசிய விளையாட்டு போட்டிகளில் இலங்கை – ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது. இதனால் சீனாவில் நடைபெறும் ஆசிய விளையாட்டு போட்டிகளில் இலங்கை அணிக்கு முதலாவது தங்கப்பதக்கம் கிடைத்துள்ளது.
நாணய சுழற்சியை வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. 19.1 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 133 ஓட்டங்களை பெற்றது. இலங்கை அணி சார்பாக திரிமன்ன 57 ஓட்டங்களை பெற்றார். பந்துவீச்சில் முஹமட் நபி 18 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை பெற்றார்.
134 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் 17.4 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 65 ஓட்டங்களை மட்டுமே பெற்றது. பந்துவீச்சில் மென்டிஸ் 3 விக்கெட்டுக்களை பெற்றார்.
இதனால் இலங்கை அணி 68 ஓட்டங்களால் வெற்றி பெற்று தங்கப்பதக்கத்தை சுவீகரித்துக்கொண்டது. ஆப்கானிஸ்தான் அணிக்கு வௌ்ளிப்பதக்கம் கிடைத்தது.
இதேவேளை இலங்கை, பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான ஆசிய விளையாட்டு போட்டிகளில் அரையிறுதி ஆட்டத்தில் பலத்த மழை பெய்ததால் இலங்கை அணி இறுதிப் போட்டிக்கு நேரடியாக தெரிவானமை குறிப்பிடத்தக்கது.





