மதம் கடந்து மலர்ந்த மனிதாபிமானம் : நெஞ்சை நெகிழவைக்கும் ஓர் சம்பவம்!!

747

Ind

உத்திரபிரதேசத்தில் ஒரு பெண்ணை காப்பாற்ற சென்ற போது இரண்டு வாலிபர்கள் உயிரிழந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.

உத்திரபிரேதசம் மாநிலத்தை சேர்ந்த கலவரத்தால் பாதிக்கப்பட்ட நகரமான மொராதபாத்தில் உள்ள சாலையில் நடந்து சென்ற போது திறந்து கிடந்த பாதாள சாக்கடை குழியில் சுமன் என்ற பெண் தவறி விழுந்து விட்டாள்.

இதனை நேரில் கண்ட இஸ்லாமிய வாலிபர்கள் தானிஷ்(16) மற்றும் நாமன் ஆகியோர் அப்பெண்னை காப்பாற்றும் நோக்கத்தில் அவர்களும் சாக்கடையில் குதித்துள்ளனர்.

துரதிஷ்டவசமாக இருவரும் அதில் சிக்கினர். உடனடியாக மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு குழியில் விழுந்த மூவரையும் பிணமாக மீட்க முடிந்தது.

ஒருவரின் உயிரை காப்பற்ற தன்னுயிர் நீத்த சம்பவம் அப்பகுதி மக்களை பெரும் துயரத்தில் ஆழ்த்தியது.

இவர்களின் இறுதி ஊர்வலத்தில் அனைத்து மதத்தினரும் கண்ணீருடன் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.