இரணைமடுக் குளத்தின் அணைக்கட்டை உயர்த்தி புனரமைக்க அமைச்சர் நடவடிக்கை!!

548

Iranamadu_Tank_Sri_Lanka

நீர்பாசண மற்றும் வடிகால் அமைப்பு அமைச்சர் டினேஷ் குணவர்த்தன நேற்று வெள்ளிக்கிழமை கிளிநொச்சிக்கான விஜயத்தை மேற்கொண்டார். இரணைமடுக் குளத்தினை புனரமைப்பது தொடர்பில் ஆராய்துள்ளார்

நேற்று காலை 9 மணியளவில் விமானம் மூலம் இரணைமடு விமான நிலையத்தை சென்றடைந்த அமைச்சர் கிளிநொச்சியின் பல்வேறு பகுதிகளையும் சென்று பார்வையிட்டார் பூநகரிப் பிரதேசத்திற்கு விஜயம் செய்துகொண்ட அமைச்சர் பூநகரி மக்களின் தேவைகளுக்காக அமைக்கப்படவுள்ள குளம் அமையவுள்ள இடத்தையும் திட்டத்தையும் பார்வையிட்டார்.
தொடர்ந்து கிளிநொச்சி மாவட்டத்தில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் நீர்த்தாங்கிகள் நீர் சுத்திகரிக்கும் இடம் ஆகியவற்றை பார்வையிட்ட அமைச்சர் பிற்பகல் கூட்டுறவு சபை மண்டபத்தில் நீர்ப்பாசனத் திட்டம் தொடர்பாக கலந்துரையாடலில் ஈடுபட்டார். இங்கு அமைச்சர் கருத்து தெரிவிக்கையில்,

நாங்கள் இந்த நீர்த்தேக்கத்திற்கு தனியாக நிதி ஒதுக்கியுள்ளோம் இரணைமடு நீர்த்தேக்கத்தின் அணைக்கட்டை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளோம் அதிகளவு நீரை சேமிக்கும் நோக்கில் ஒரு சில அடிகள் உயர்த்தி புனரமைக்கவுள்ளோம் என்றார்.