வவுனியா குடியிருப்பு சித்திவிநாயகர் ஆலய மகிடாசூரசம்ஹாரம்!!

746

வவுனியா, குடியிருப்பு சித்திவிநாயகர் ஆலயத்தில் மகிடாசூரசம்ஹாரம் நேற்று (03.10) வெள்ளிக்கிழமை சிறப்பாக இடம்பெற்றது.

அகில உலக சொரூபியாக விளங்குகின்ற அன்னை பராசக்தி மகிடாசூரனை சம்ஹாரம் செய்த நாளில் வவுனியா, பண்டாரிகுளத்தில் எழுந்தருளி அருளாட்சி புரிகின்ற ஆதிபராசக்தியான முத்துமாரியம்மன் குடியிருப்பு சித்திவிநாயகர் ஆலயத்திற்கு வருகை தந்து அங்கு எழுந்தருளி மகிடாசூரனை சம்ஹாரம் செய்யும் திருக்காட்சி இடம்பெற்றது.

பல ஆண்டுகளாக பண்டாரிகுளம் முத்துமாரியம்மன் குடியிருப்பு சித்தி விநாயகர் ஆலயத்திற்கு எழுந்தருளி மகிடாசூரனை சம்ஹாரம் செய்கின்றமை குறிப்பிடதக்கது.

1 2 3 4