வவுனியா சிவன் முதியோர் இல்லத்துக்கு முதியோர் தினத்தை முன்னிட்டு பெறுமதியான இரு தரப்பார் அன்பளிப்பு!!

1745

முதியோர் தினத்தை முன்னிட்டு வவுனியா கோவில்குளம் சிவன்கோவில் “சிவன் முதியோர் இல்லத்தின்” வேண்டுகோளுக்கு அமைவாக, மழை காரணமாக ஒழுகிக் கொண்டு இருக்கும் ஒரு கொட்டகைக்கு விரிப்பதட்க்கு, பெறுமதியான இரு பெரிய தரபார்கள் புங்குடுதீவு 12ம் வட்டாரத்தை சேர்ந்த அமரர்.மு. சொக்கலிங்கம் நினைவாக வழங்கி வைக்கபட்டது.

இந்த பெறுமதியான இரு பெரிய தரபார்களையும் தமிழ் விருட்சம் சமுக ஆர்வலர்கள் அமைப்பின் சந்திரகுமார் (கண்ணன் ), மாணிக்கம் ஜெகன், மற்றும் ஊடகவியலாளர் கபில்நாத் ஆகியோர் நேரடியாக மழைக்கும் மத்தியிலும் சென்று, சிவன் முதியோர் இல்லத்தின் நிர்வாகளில் ஒருவரான திரு ஆ.மாதவனிடமும், இல்ல பொறுப்பாளர் பா.அகிலா ஆகியோரிடம் கையளித்தனர். இவர்களுடன் இல்ல நிர்வாகிகளில் ஒருவரான அ.சூரியகுமார் (விக்னா ) அவர்களும் கலந்து கொண்டார்.

2009.04.15 இல் தொடங்கபட்ட சிவன் முதியோர் இல்லம் இன்று 11 சிங்களவர்கள், 2 முஸ்லிம்கள், 142 தமிழர்களுடன் மொத்தம் 155 பேருடன் இயங்கி வருவதுடன் அதில் இருவர் தம்பதிகளாக வசிப்பதும் குறிப்பிடத்தக்கது.

11 12 13 14 15 16 17 18 19 20