இலங்கை அகதிகள் முகாமில் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளான 5 வயது சிறுமி!!

551

abuse

இலங்கை அகதிகள் முகாமில் 5 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த கல்லூரி மாணவன் கைது செய்துள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு சின்னப்பள்ளிக்குப்பம் அகதிகள் முகாமைச் சேர்ந்த 18 வயதுடைய எஸ். பிரிட்டன் என்ற இளைஞன் மாலை நேர வகுப்பு நடத்தி வந்துள்ளார். அவரிடம் கல்வி கற்கச் சென்ற 5 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் சிறுமியின் தாயார் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டை அடுத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமி வேலூர் வைத்தியசாலையில் வைத்திய பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.