
வவுனியா – ஹொரவப்பொத்தானை வீதியில் இரண்டு மோட்டர் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். நேற்று வெள்ளிக்கிழமை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
வேகமாக பயணித்த இரு மோட்டார் சைக்கிள்களே கட்டுப்பாட்டை இழந்து மோதிக் கொண்டதில் விபத்துக்குள்ளாகியுள்ளன.
மோட்டார் சைக்கிள் சாரதிகளான எஸ். புஸ்பாரதன் (29), சுபசிங்க (32) என்பவர்களே விபத்தில் காயமடைந்து வவுனியா வைத்தியாசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த விபத்து தொடர்பான விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.





